தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஸ்மார்ட்சிட்டி, எய்ம்ஸ் திட்டங்களை ப.சிதம்பரம் கொண்டு வந்தாரா?' - செல்லூர் ராஜூ கேள்வி - smartcity

மதுரை: மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற திட்டங்களை கொண்டு வந்தாரா என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

செல்லூர் ராஜூ

By

Published : Apr 7, 2019, 7:57 PM IST

மதுரையில் 22வது வார்டு கோச்சடையில் அதிமுக தேர்தல் பணிமனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பகுதியில் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார். காரைக்குடியில் புதுப்புது வங்கிகளை மட்டுமே திறந்தார். இப்போது அந்த வங்கிகள் முழுவதும் திவால் ஆகிவிட்டது. மதுரைக்கு நிரந்தரமான குடிநீர் கிடைக்க ரூ.1,554 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, 3வது கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

செல்லூர் ராஜூ

எய்ம்ஸ் மருத்துவமனை, 13 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களை ப.சிதம்பரம், நிதி அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தாரா? அவரது குடும்பத்தை தான் கவனித்தார். நாட்டுக்கு நல்லது செய்பவர்களைத்தான் மக்கள் நினைப்பார்கள். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, தாலிக்கு தங்கம் போன்ற பல்வேறு திட்டங்களை எடப்பாடியார் நிறைவேற்றி வருகிறார்", என்றார்.

ABOUT THE AUTHOR

...view details