மதுரை பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி.வி.எஸ்.நகர் ஆதிய பகுதிகளை இணைப்பதற்காக கடந்த 2000ஆம் ஆண்டில் 33 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் முடிவுறாத நிலையில் உள்ள பழங்காநத்தம் மேம்பாலத்தினை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.
இந்த மேம்பாலத்தில் சமூக விரோதச் செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது என புகார் எழுந்தததையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ மேம்பாலத்தினை ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டமானாலும் சரி, எந்த கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டமானாலும் சரி, மக்கள் தேவையை பூர்த்தி செய்வதுதான் இந்த அரசின் நோக்கம்.
அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழங்காநத்தம்,ஜெய்ஹிந்த்புரம், திருப்பரங்குன்றம்,டி.வி.எஸ் நகர் ஆகியவற்றினை இணைக்கும் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலங்களை கட்ட திட்டமிடுவதற்கு முன்பாகவே தனியார் இடத்தினை கையகப்படுத்திவிட்டுதான் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அப்போதுதான் பாலம் கட்டும் திட்டங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும்.
மதுரையில் தற்போது கட்டப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் நிலங்களை கையகப்படுத்திய பிறகுதான் கட்டப்படுகின்றன. மதுரையில் நேற்று பெய்த கனமழையால் நியாய விலை கடைகளில் மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கரோனாவை விரட்ட அரசாலும் சட்டத்தாலும் எதுவும் செய்ய முடியாது. மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும். கூட்டுறவுத் துறை பெயருக்குதான் பெரிய துறை ஆனால் நிதி ஆதாரமில்லாத துறை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாவுப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்கீடு!