ஈழ விடுதலைப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாவீரர்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பிலும் மாவீரர்கள் தினம் மதுரையில் கடந்த 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றுகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அதில் ஒரு பகுதியாக பிரபாகரன் குறித்து அவர் பேசுகையில்,
'' ஒரு முறை பிரபாகரன் என்னிடம் பன்றி கறி சாப்பிட்டாயா என்று கேட்டார். இல்லை அண்ணா... இனிதான் வேட்டைக்கு போகனும் என்றேன். உடனடியாக நாற்காலியிலிருந்து கோபத்துடன் எழுந்து 'என்ன நடக்குது இங்க' என்று காடே அதிரும்படி கேட்டார். பொட்டு அம்மான், நடேசன் என எல்லோரும் ஓடிவிட்டார்கள். சுற்றிலும் பீரங்கியின் ஷெல்லை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், நீங்கள் பதில் சொல்வதா... இல்லை நான் பதில் சொல்வதா... என்று இயக்கத்தில் இருப்பவர்களிடம் கோபத்துடன் கேட்டார்.
எனக்கு வியர்த்துவிட்டது. பிறகு அரைமணி நேரம் கழித்து என்னைப் பார்த்து, ' நான் எங்க இருக்க வெச்சிருக்கேனோ... அங்க இருக்கனும்... எல்லாம் உங்களுக்கு வரும் என்று பிரபாகரன் கூறியதாக சீமான் பேசினார்.