மதுரை மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (29). இவருக்கும் பத்மாவதி என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாட்டுத்தாவணி அருகே உள்ள மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், திருமண மண்டபத்திற்குள் நுழைந்த 37 வயது மதிக்கத்தக்க ஈஸ்வரி என்ற பெண் சினிமா படபாணியில் திருமணத்தை நிறுத்துங்க என்று கூச்சலிட்டுள்ளார்.
சினிமா பட பாணியில் திருமணத்தை நிறுத்திய கர்ப்பிணிப் பெண்! - சலசலப்பு
மதுரை: மணமகன் தாலி கட்டும் நேரத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட, அங்கிருந்தவர்கள் அப்பெண்ணிடம் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது அப்பெண், முணியாண்டி தன்னை காதலித்து ஏமாற்றி கர்ப்பாமாக்கிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார் என்று ஈஸ்வரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனைத்து மகளிர் காவல்துறையினர், மணமகன் முணியாண்டியையும், பாதிக்கப்பட்ட பெண் ஈஸ்வரியையும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இந்நிலையில், மணப்பெண்ணின் வீட்டார் தங்களை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாகக் கூறி மணமகன் மீது புகார் மனு அளித்தனர். விசாரணையில் ஈஸ்வரியை முணியாண்டி காதலித்தது உண்மை என நிரூபணம் ஆனது. அதனைத்தொடர்ந்து, மணமகன் முணியாண்டி கர்ப்பிணிப் பெண் ஈஸ்வரியுடன் சேர்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டார்.