மதுரை அருகே ஆத்திகுளம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் ஒன்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது. ஆத்திகுளம் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்துக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்பு அந்த பகுதியில் இருந்த வீட்டின் சுற்றுசுவர் மீது மோதி நின்றது. இருப்பினும் இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த குழந்தைகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தறிக்கெட்டு ஓடிய பள்ளி வாகனம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள் - madurai school
மதுரை: தனியார் பள்ளி வாகனம் ஒன்று தறிகெட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
private school van
குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். பின்பு அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என அறிந்த பின்னர் அவர்களை மற்றொரு வாகனத்தில் ஏற்றி அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தலைமறைவான வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.