தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

SBI நகை மதிப்பீட்டாளருக்கான தொகை நிர்ணய அறிவிப்பிற்கு தடை! - உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நகை மதிப்பீட்டாளருக்கான தொகையை நிர்ணயித்து வெளியிட்ட அறிவிப்பானையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நகை மதிப்பீட்டாளர்கான தொகை நிர்ணயம் அறிப்பிற்கு இடைக்காலத் தடை!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நகை மதிப்பீட்டாளர்கான தொகை நிர்ணயம் அறிப்பிற்கு இடைக்காலத் தடை!

By

Published : Dec 19, 2019, 7:37 PM IST

பாரத ஸ்டேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் சங்கத்தின் சார்பில் நாகர்கோவில் சடகுட்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.

மனுவில், “ தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் உள்ள நகை மதிப்பீட்டாளர் சங்கத்தில் 54 பேர் உறுப்பினர்கள் இருந்தனர். அப்போது அவர்களுக்கு நகை மதிப்பீட்டிற்காக குறைந்தது 100 முதல் 500 வரை கட்டணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் , பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் முன்பு நகை மதிப்பீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகையைவிட குறைவாக கட்டணம் வழங்கப்படுகிறது. அதனால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று நகை மதிப்பீட்டிற்கான தொகையை நிர்ணயித்து வெளியிட்ட அறிவிப்பணையை ரத்து செய்ய வேண்டும். முன்னதாக ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் பொதுமேலாளர் வெளியிட்ட அறிவிப்பாணைப்படியே நகை மதிப்பீட்டு கட்டணம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இது குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...தெலுங்கு நடிகர் ராம் சரணின் ஒயில்டு லைஃப் போட்டோகிராபி

ABOUT THE AUTHOR

...view details