மதுரை:தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனுமான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகியோரை 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல் துறை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது, காவல் துறையினர் தாக்குதலில் ஆவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.