தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு: செய்தியாளர்களை அவமரியாதையாக பேசி தாக்கு! - Attack journalists

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளிகள், செய்தியாளர்களை அவதூறாகப் பேசியதுடன் மட்டுமன்றி தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

Sathankulam case: Attack journalists by speaking disrespectfully
Sathankulam case: Attack journalists by speaking disrespectfully

By

Published : Dec 10, 2020, 10:44 PM IST

மதுரை:சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு விசாரணை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களும் மதுரை மத்திய சிறையில் இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்

இந்நிலையில் வழக்குத் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக நீதிமன்றம் முன் நுழைவாயிலில் செய்தியாளர்கள் காத்திருந்தனர். வழக்கு விசாரணை முடிவுற்று குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.

அப்போது மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றும் உளவுத்துறையினர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஊடகத்தினர் குறித்து தவறாக கூறியதால் அவர்கள் ஊடகத்தினரை அவதூறாகப் பேசிய தகாத வார்த்தைகளால் திட்டினர். குற்றம்சாட்டப்பட்ட காவலர்களுக்கு ஆதரவாக மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் மதுரை மாநகர காவல்துறை உளவுப் பிரிவினர் செயல்பட்டு வருவதோடு, ஊடகத்தில் செய்தி வெளியாவதை தடுக்கும் நோக்கில் அவர்கள் செயல்பட்டனர்.

செய்தியாளர்களை அவமரியாதையாக பேசி தாக்கு

தொடர்ந்து குற்றவாளிகளின் குடும்பத்தினரும் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசினர். இதற்கு உளவுத்துறை அலுவலர்கள் செயல்பாட்டைக் கண்ட பொதுமக்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறையினர் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் இன்று ஆஜர்

ABOUT THE AUTHOR

...view details