தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு: காவலர் பயிற்சி தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் - தமிழ்நாடு அரசு

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கில் போலீசாருக்கு அளிக்கப்படும் பயிற்சி தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்ற கிளை!
சாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்ற கிளை!

By

Published : Aug 11, 2022, 7:47 AM IST

மதுரை:சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை-மகன் ஆகிய இருவர், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிமன்றத்தின் தரப்பில் காவல்துறைக்கு பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகி காவல்துறையினருக்கான பயிற்சி முறையாக நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “காவல்துறையினருக்கு பயிற்சி வழங்குவதற்கான பட்டயப் படிப்பில் 246 காவல்துறையினருக்கு பெங்களூரு நிமான்ஸ் மூலம், கடந்த 2021 முதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணம் தமிழ்நாடு காவல்துறையால் செலுத்தப்பட்டது.

காவல்துறையினருக்கு வழங்குவதற்காக 2018-2023 வரை 6 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு காவலர் புத்தாக்க பயிற்சிக்காக ரூ.61.51 லட்சம் நிதியை ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது. 2020-2021 ஆம் ஆண்டுகளில் கரோனா காரணமாக முழு பயிற்சி வழங்கப்படவில்லை.

4,484 காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெறும் காவல்துறையினர் நிரந்தரமாக காவல்துறையினருக்காக பயிற்சி வழங்க பயன்படுத்தப்படுவர். 12 தலைப்புகளின் கீழ் காவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ஜாமீன் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details