தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்லியம்மன் சூல பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பு வழக்கு - நடவடிக்கை எடுக்க  உத்தரவு - ஆக்கிரமிப்பு வழக்கு

செல்லியம்மன் சூல பிடாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கில் அறநிலையத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

sankarankovil-temple-land-encroachment
sankarankovil-temple-land-encroachment

By

Published : Jul 27, 2021, 2:49 PM IST

மதுரை: தேனியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், "சங்கரன்கோவில் அருகே பருவக்குடி கோதை நாச்சியார்புரத்தில் செல்லியம்மன் சூல பிடாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அறநிலையத் துறைக்கு உட்பட்டது.

போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பபு

இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு, கடைகள் அமைத்து வியாபாரம் நடக்கிறது. இது தொடர்பாக ஆக்கிரமிப்பாளரிடம் கேட்டபோது, அரசியல் ஆள் பலம் உள்ளது எனக் கூறி மிரட்டுகிறார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர், சங்கரன்கோவில் அறநிலையத்துறை ஆய்வாளருக்கு மனு அனுப்பியும், நடவடிக்கை இல்லை. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

நீதிபதிகள் உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அமர்வில் இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. கோயில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற வேண்டும். மேலும் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை

ABOUT THE AUTHOR

...view details