மதுரை:தென்காசியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் தனி நபர்கள் கடைகள் அமைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் சாலையில் கோழி, மாடு வளர்ப்பதால் கழிவு நீர் மூலம் கொசுகள் அதிகளவில் உள்ளன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
சட்டவிரோத ஆக்கிரமிப்பு
நகராட்சி இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.