விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த உதய குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் "திருச்சுழி தாலுகா ஆண்டியேந்தல் ஊராட்சியில் அரசு நலத்திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு நடந்த தணிக்கையில், ஊராட்சி நிதி தவறாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
கடந்த 2016 முதல் 2019 ஆண்டு வரையில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 31 லட்சம் ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எலக்ட்ரிக் பொருட்கள், பினாயில், கிருமிநாசினி உள்ளிட்டவை வாங்கியதில் பல லட்சம் ரூபாய்க்கு போலி பில்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று மனுவில் கூறியிருந்தார்.
கிருமிநாசினி வாங்கியதில் மோசடி? - madurai
மதுரை: விருதுநகர் மாவட்டம் ஆண்டியேந்தல் ஊராட்சியில் கிருமிநாசினி வாங்கியதில் பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.
கிருமிநாசினி வாங்கியதில் பல லட்சம் ரூபாய் மோசடி
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனுதாரரின் புகார் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்து, நான்கு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: '10 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் பலி’