மதுரை: மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர், பாலமுருகன். பில்டிங்க் காண்டிராக்டரான இவருக்கு சரவணகுமார் என்ற மகனும், 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். சரவணகுமார் விருதுநகரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் சிவில் இன்ஜினீயர் முடித்துவிட்டு, இரண்டு வருடமாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
சரவணகுமார் 6ஆம் வகுப்பு படிக்கும்போதே, விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக மாநில அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி பல்வேறு பரிசுகளையும் குவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 9ஆம் தேதி பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், அவருக்கு இன்று (டிச.30) வண்டியூரில் மெளன அஞ்சலி செலுத்த, அவருடன் விளையாடிய விளையாட்டு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலத் தலைவர் சோலை ராஜா தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.