டாஸ்மாக் விற்பனையைப் பொறுத்தவரை மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மதுரை மண்டலமாக செயல்பட்டுவருகின்றன.
இச்சூழலில் தமிழ்நாடு அரசு நேற்று மதுபான கடைகளை திறக்க உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கரோனா தொற்றின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளைத் தவிர அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.
நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய விற்பனை, மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரியவர், சிறியவர், இளைஞர் என வயது வேறுபாடின்றி அனைவரும் மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
இதன் காரணமாக மதுரை மண்டலத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 46 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழ்நாட்டின் பிற நான்கு மண்டலங்களில் நடைபெற்ற விற்பனையைக் காட்டிலும் மதுரை மண்டலத்தில் அதிகமாக விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் மதுபான விற்பனை எவ்வளவு? - மதுரையில் ரூ.46.78 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
மதுரை: நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் 46 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
மதுரையில் ரூ.46.78 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
இதையும் படிங்க:மதுப்பிரியர்களை உற்சாகப்படுத்திய காவலர்!