மதுரை மாவட்டம், செல்லூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் தலை நசுங்கிய நிலையில், ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்தது விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
பிரபல ரவுடி தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை - Rowdy murdered
மதுரை: பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பிரபல ரவுடி தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை
மேலும் அவர் மீது மதுரை காவல்நிலையத்தில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நேற்றுஇரவு செல்லூர் பகுதியில் அமர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர்கள் சதீஷ்குமாரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத கும்பலை தேடி வருகின்றனர்.
Last Updated : Jul 2, 2019, 9:37 AM IST