மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (27). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று (ஆக. 19) மாலை வண்டியூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கின் பின் பகுதியில் உள்ள முள்புதரில் ஒருவர் கொடூரமாக வெட்டப்பட்டுக் கிடப்பதாக அண்ணாநகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த ரவுடி ஆனந்தனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகஇராசாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோப்பநாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்திவருகின்றனர்.