தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 7ஆம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக இஸ்லாம் சகோதரர்கள் காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருந்து மாலை தொழுகை முடித்த பின்பு நோன்பு கஞ்சி அருந்தி நோன்பை முடித்துக் கொள்வது வழக்கம். நோன்புக் கஞ்சிக்குத் தேவையான பச்சரிசியை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து மசூதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
ரம்ஜான் நோன்பு: விலையில்லா அரிசியை தாமதப்படுத்தும் அலுவலர்கள்
மதுரை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிக்கு வழங்கப்படும் பச்சரிசியை அலுவலர்கள் தாமதப்படுத்துவதாக இஸ்லாமியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தலைமையில் கடந்த 2ஆம்தேதி மசூதிகளுக்கு பச்சரிசி வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலமா நகர் பள்ளிவாசலைச் சார்ந்தவர்கள் பச்சரிசி வந்தடையாததால் தமிழ்நாடு நுகர் பொருட்கள் வாணிபக் கழகத்தினரிடம் கேட்டபோது ரம்ஜான் பண்டிகைக்கு வழங்குவதற்கான பச்சரிசியை வழங்கக்கோரி எந்த ஒரு அரசாணையும் வரவில்லை என்றும், அந்த அரசாணை வந்தால் மட்டுமே பச்சரிசி வழங்க முடியும் என்றும் கூறுயுள்ளனர்.
இதுகுறித்து உலமா நகர் பள்ளிவாசலின் தலைவர் ராஜா ஓசையின் தாவூத் கூறுகையில், ’இதுபோன்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அரசாணை பிறப்பித்தும் இவர்கள் தர மறுப்பது எங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வழங்க வேண்டிய பச்சரிசியை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.