விருதுநகரைச் சேர்ந்த ஒய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் தங்கராஜ், உறவினரின் கிடா வெட்டு விருந்திற்காக மதுரை மாவட்டம் மேலூர் அழகர்கோவிலுக்கு வந்து அங்கிருந்த பக்தர்கள் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஒய்வு பெற்ற சார்பு ஆய்வாளர்! - ஒய்வு பெற்ற சார்பு ஆய்வாளர்
மதுரை: மேலூர் விடுதியில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த ஒய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் உடலை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
காலையில் அறைக்கு சென்ற அவர், மாலை ஆகியும் அறைலிருந்து வெளிவரவில்லை. அறையிலிருந்து நாற்றம் வந்துள்ள நிலையில் விடுதியின் பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தப்போது, தங்கராஜ் காது மற்றும் உடலின் சில இடங்களில் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் உடலில் காயங்கள் இருப்பதால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கூடும் என அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.