மதுரை:மேலூரில் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ வரும் உள்ளாட்சித் மன்றத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி வாகை சூட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைக்க உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.
ஆனால் நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் என்பது சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால் அதனை மாற்றி அமைக்க அரசு முயல வேண்டும்.
ஐந்து மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடத்தில், கலைஞர் நூலகம் கட்ட முயல்வதை கண்டித்து அதிமுக சார்பில் விவசாயிகளின் ஆதரவோடு கண்டன போராட்டம் நடத்தப்படும்.
மேலும் நிதி நிலை அறிக்கையில் வெள்ளை அறிக்கை வெளியிட போவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. முரணாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: சமோசாவில் பல்லி...தெரியாமல் சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி