தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி - மதுரை அணி சாம்பியன்! - zonal level basket ball tournament

மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லுரிகளுக்கு நடத்தப்பட்ட மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

regional-basketball-tournament

By

Published : Oct 6, 2019, 11:26 PM IST

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இடையேயான மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது

இப்போட்டியில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இத்தொடரின் இறுதிப் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் மதுரையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும், திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி இரண்டாமிடத்தையும் தட்டிச் சென்றது.

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டிகள்

வெற்றி பெற்ற அணிகளுக்கு போட்டி நடைபெற்ற பொறியியல் கல்லூரி தாளாளர் தன வேலன் பரிசுகள் மற்றும் கோப்பையை வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிங்க: காஷ்மீர் மக்கள் ஹேப்பிதான் - பிரகாஷ் ஜவடேகர்

ABOUT THE AUTHOR

...view details