தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிடிவி தினகரன் தலைமையில் சிறந்த ஆட்சி அமையும் - நடிகர் ரஞ்சித் - டிடிவி

மதுரை: ஆளும் கட்சியின் மீது உள்ள கோபத்தில் மக்கள் எந்த சின்னமாக இருந்தாலும் வாக்களிப்பார்கள் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

File pic

By

Published : Apr 2, 2019, 8:13 AM IST

Updated : Apr 2, 2019, 3:22 PM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் டேவிட் அண்ணாதுரைக்கு ஆதரவாக நடிகர் ரஞ்சித் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது நடிகர் ரஞ்சித் எமக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது, 'அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். சின்னம் மாற்றியதால் எங்களுக்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை. ஆளும் கட்சியின் மீது உள்ள கோபத்தில் மக்கள் எந்த சின்னமாக இருந்தாலும் வாக்களிப்பார்கள்.

மக்கள் கயவர்களை வேரறுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர். அது திமுகவாக இருக்கட்டும், அதிமுகவாக இருக்கட்டும், இபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் மக்கள் தள்ளிவைத்துள்ளனர்.

டிடிவி தினகரன் தலைமையில் ஒரு மிகச்சிறந்த ஆட்சி அமைக்கப்படும். இதற்கு அதிகமான மக்கள், இளைஞர்கள் ஆதரவாக உள்ளனர்' என்று அவர் தெரிவித்திருந்தார்.

ரஞ்சித் பேட்டி
Last Updated : Apr 2, 2019, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details