தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் - அஜ்மீர் ரயில் பிரோஸ்பூர் வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - தெற்கு ரயில்வே உத்தரவு

Southern Railway: ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் பிரோஸ்பூர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் - அஜ்மீர் ரயில் பிரோஸ்பூர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
ராமேஸ்வரம் - அஜ்மீர் ரயில் பிரோஸ்பூர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 9:47 PM IST

மதுரை: ராமேஸ்வரத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் வரை இயக்கப்படும் வாராந்திர விரைவுவண்டி ரயில், பிரோஸ்பூர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் ரயில் நிலையத்திற்கு வாராந்திர விரைவுவண்டி ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது புதிய பாம்பன் பால வேலைகள் நடைபெற்று வருவதால், இந்த ரயில் மானாமதுரையிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரோஸ்பூர்கன்டோண்மென்ட் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இன்று (அக.04) மானாமதுரையிலிருந்து புறப்படும் மானாமதுரை - அஜ்மீர் வாராந்திர ரயில் (20974) பிரோஸ்பூர் வரை நீட்டிக்கப்படுகிறது. நீட்டிக்கப்பட்ட இந்த ரயில் மானாமதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்பட்டு, வியாழக் கிழமை இரவு 10.45 மணிக்கு அஜ்மீர் சென்று சேரும். பின்பு அஜ்மீரிலிருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு, வெள்ளிக்கிழமை மதியம் 01.30 மணிக்கு பிரோஸ்பூர்கன்டோண்மென்ட் சென்று சேரும்.

இதை அடுத்து, மறு மார்க்கத்தில் அக்டோபர் 7 முதல் பிரோஸ்பூர் கன்டோண்மென்ட் - மானாமதுரை வாராந்திர ரயில் (20973) பிரோஸ்பூர் கன்டோண்மென்ட்டில் இருந்து சனிக்கிழமைகளில் அதிகாலை 05.55 மணிக்குப் புறப்பட்டு, இரவு 07.50 மணிக்கு அஜ்மீர் வந்து சேரும். பின்பு அங்கிருந்து இரவு 08.10 மணிக்குப் புறப்பட்டு, திங்கட்கிழமை இரவு 08.15 மணிக்கு மானாமதுரை வந்தடையும்.

அஜ்மீர் - பிரோஸ்பூர் கன்டோண்மென்ட் இடையே கிஷன்கர், ஜெய்ப்பூர், ரிங்காஸ், சிகார், ஸூரி, சதுல்புர், டாஹ்சில் பத்ரா, ஹனுமன்கர், சங்கரியா, மாறுவார், படிண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிகள்:9-ஆவது நாளாகத் தொடரும் பகுதி நேர ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்..!

ABOUT THE AUTHOR

...view details