தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினிகாந்தின் பிறந்தநாள்:  திருப்பரங்குன்றம் கோயிலில் ரசிகர்கள் வழிபாடு! - ரஜினிகாந்தின் பிறந்தநாள்

மதுரை: நடிகர் ரஜினியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், அவரது ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக தேங்காய் உடைத்து, பொதுமக்களுக்கு ஆயிரம் லட்டுகளை வழங்கினர்.

திருப்பரங்குன்றம் கோயிலில் ரஜினி ரசிகர்கள் வழிபாடு
திருப்பரங்குன்றம் கோயிலில் ரஜினி ரசிகர்கள் வழிபாடு

By

Published : Dec 11, 2020, 3:32 PM IST

நடிகர் ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாள் நாளை (டிச.12) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதிலிமுள்ள அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் விதமாகவும், அவரது 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டும் நாளை பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர்.

பின்னர், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றம் வெற்றிபெற வேண்டி 234 தொகுதிகளுக்கும் ஒரு தேங்காய் வீதம் மொத்தம் 234 தேங்காய்கள் திருப்பரங்குன்றம் கோவில் வாசல் முன்பு உடைத்தனர்.

மேலும், 234 எலுமிச்சை பழங்கள், 234 வடைகளை மாலையாக கோர்த்து சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வருங்கால முதல்வர் ரஜினி: ஆடித்தீர்க்கும் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details