மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் 566 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசுகையில் "மதுரையில் இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் வீட்டு வாசலில் குடிநீர் கிடைக்கும், அதிமுக ஆட்சியில் மதுரை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது, புனிதமான வைகையில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, 78 கோடி மதிப்பில் வைகையாற்றின் கரையில் புதிய சாலை அமைக்கப்படும்" என்றார்.
'ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்த புதுமையும் நடக்காது' - செல்லூர் ராஜூ - மிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்கப்போவதில்லை
மதுரை: ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்கப்போவதில்லை என ரஜினியின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, "நேற்று வரை அறைக்குள் இருந்த நடிகர்கள் இன்று பொதுவெளிக்கு வந்துள்ளனர், நடிகர்களை முதலமைச்சர் வேட்பாளராக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்கப்போவதில்லை. அதிமுகவில் இருந்து அமைச்சர்கள் உட்பட யாரும் ரஜினியின் கட்சிக்கு செல்ல மாட்டார்கள்" என்றார்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் உயர்மட்ட பாலத்தை விரைவில் கட்டிமுடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
Last Updated : Dec 12, 2020, 5:12 PM IST