தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகிலனுக்கு பிணை வழங்கக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் - முகிலன்

மதுரை: முகிலனுக்கு பிணை வழங்கக் கூடாது என குளித்தலையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Rajeswari filed Petition against mugilan bail

By

Published : Nov 7, 2019, 9:42 AM IST

Updated : Nov 7, 2019, 12:08 PM IST

ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன், சமூக செயற்பாட்டாளரான இவர் மீது கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் பாலியல் புகார் அளித்தார். அதன்பேரில் குளித்தலை மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாயமான முகிலனை, ஜூலை மாதம் திருப்பதி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

அவர் தன் மீதான பாலியல் வழக்கில் பிணை கேட்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்து வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது அவருக்குப் பிணை அளிக்கக்கூடாது என ராஜேஸ்வரி தரப்பில் இடைக்கால மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 2016 ஆண்டில் முகிலன் அறிமுகமானார். அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உள்பட ஏராளமான சமூக நடவடிக்கைகளில் அவருடன் பங்கேற்றேன். ஆனால் அவர் தொடர்ந்து எனக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை அளித்துவந்தார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பான புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மனுவில் முகிலன் பிணை கேட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். முகிலனின் பிணை மனுவுடன், இந்த மனுவும் விசாரணைக்கு வரவுள்ளது.

Last Updated : Nov 7, 2019, 12:08 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details