தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை: ஆடிக்கிருத்திகை நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை - Public not allowed in madurai temple due to corona virus spread

கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி கோயில் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

public
மதுரை

By

Published : Jul 31, 2021, 8:37 PM IST

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில், அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய கோயில்களில் வருகின்ற 02.08.2021 முதல் 08,08,2021 வரை நடைபெறவிருக்கும் ஆடி கிருத்திகை நிகழ்வுகள் அனைத்திலும், கரோனா தொற்று பரவல் காரணமாக அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தத் திருவிழா மற்றும் பொது தரிசனத்தில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னையில் 78.2% பேருக்கு கரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது - ஆய்வில் தகவல்.

ABOUT THE AUTHOR

...view details