தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: ஜெயலலிதா கைரேகை குறித்து விசாரணைக்கு உத்தரவிட கம்யூனிஸ்ட்  வலியுறுத்தல் - jayalalitha thumbprint

மதுரை: போலியான கைரேகைக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

By

Published : Mar 23, 2019, 9:24 AM IST

கடந்த திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தொடுத்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதி ,அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இந்தத் தீர்ப்பில், கட்சி சின்னம் சான்றிதழ் படிவத்தில் கையொப்பம் மட்டுமே ஏற்புடையது என்ற விதிக்கு மாறாக, கைரேகையை ஏற்றுக் கொண்டதன் மூலம் தேர்தல் அலுவலர் தவறு செய்துள்ளார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள கை ரேகையும் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதோடு ஜெயலலிதா சுயநினைவோடு இல்லாத நிலையில் எப்படி கைரேகை வைத்திருக்க முடியும். எனவே, கைரேகை போலியானது என்ற அடிப்படையில் ஏ.கே. போஸ் அவர்களின் வெற்றியை ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி,

'ஒரு முதலமைச்சரின் கைரேகையையே போலியாக பதிவுசெய்தது பல கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய தில்லுமுல்லு செய்தது யார் என்பதும், தேர்தல் ஆணையம் இதை எப்படி ஏற்றுக் கொண்டது என்பதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.

எனவே, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியுள்ளது.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்த காலத்தில் அவரது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அரசு கோப்புகளில் வேறு ஏதும் முறைகேடு மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடும் என்ற வலுவான சந்தேகங்களை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details