தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுநல வழக்குகளில் புகைப்படங்கள் மட்டும் போதாது.. நீதிமன்றம் கூறியது என்ன? - high court news

Madurai High court: போதுமான ஆவணங்கள் இல்லாமல் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் மட்டும் பொது நல மனுத் தாக்கல் செய்தால் மனுதாரர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க இயலாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்துள்ளது.

பொதுநல வழக்குகளில் புகைப்படங்கள் மட்டும் போதாது
பொதுநல வழக்குகளில் புகைப்படங்கள் மட்டும் போதாது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 8:46 AM IST

மதுரை: தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மனுதாரர்கள் தனித்தனியாக கிராம ஊராட்சியில் முறைகேடு, புதிய அலுவலக கட்டடம் கட்ட உத்தரவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பு மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பொது நல வழக்குகள் தாக்கல் செய்யும் மனுதாரர்கள், உரிய கள ஆய்வு மேற்கொண்டு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரரின் கோரிக்கைகள் குறித்து, தொடர்புடைய அதிகாரிகளுக்கு மனு அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்கிய பிறகு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். பொது நல வழக்கில் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு, கோரிக்கைகள் குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று, மனுத் தாக்கல் செய்தால் கூடுதல் பலமாக இருக்கும்.

மேலும், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் மட்டும் பொது நல மனுவில் தாக்கல் செய்தால், மனுதாரர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க இயலாது" என நீதிபதிகள் அறிவுறுத்தி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:மூன்றாம் பாலினத்தவருக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

ABOUT THE AUTHOR

...view details