மதுரை உத்தங்குடி பகுதியில் ஜெய ஜெய மோட்டார்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் திருநெல்வேலி விற்பனைப் பிரதிநிதியாக அருண் குமார் என்பவர் இருந்துள்ளார்.
மதுரையில் தனியார் நிறுவன விற்பனைப் பிரதிநிதி ரூ.40 லட்சம் மோசடி! - தனியார் நிறுவனம்
மதுரை: தனியார் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி சுமார் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
தனியார் நிறுவன விற்பனைப் பிரதிநிதி 40 லட்சம் மோசடி
இந்நிலையில், நிறுவனத்தில் இருந்து சுமார் 82 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு மோட்டார் உதிரிப் பாகங்கள் வாங்கிக் கொண்டு, அதற்குச் செலுத்த வேண்டிய மீதிப் பணமான சுமார் 40 லட்சத்து 48 ஆயிரத்து 136 ரூபாயை செலுத்தாமல் மோசடி செய்ததாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் முத்துராமன் என்பவர் புகார் அளித்தார்.
இதனையடுத்து, அருண் குமார் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறை, இது தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது.