தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீசார் தாக்கியதில் காலை இழந்த இளைஞர்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: காவலர்கள் தாக்கியதில் காலையிழந்தவருக்கு இழப்பீடு வழங்கவும், அதற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிய வழக்கில் மாநில மனித உரிமை ஆணைய செயலர், மதுரை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai
madurai

By

Published : Feb 13, 2020, 7:16 PM IST

மதுரை அன்புநகரைச் சேர்ந்த நதியா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "என்னுடைய கணவர் பெயர் அம்முனி என்ற அருண்பாண்டியன். எங்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தையுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் தேதி எனது கணவர் வீட்டிலிருந்தபோது அங்கு வந்த மதிச்சியம் மற்றும் அண்ணாநகர் காவல் துறையினர், அவரை வலுக்கட்டாயமாக அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர். அதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் கால் சிகிச்சையில் துண்டிக்கப்பட்டது. அதன்காரணமாக அவர், மற்றவர் துணையில்லாமல் நடமாட முடியவில்லை. எனவே என் கணவரைத் தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், என் கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் இருவரும் வழக்கு குறித்து மாநில மனித உரிமை ஆணைய செயலர், மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடியும்? - மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details