மதுரை தெப்பக்குளம் டீமாட்டி ரங்கசாமி ஐயர் தெரு பகுதியில் தெப்பக்குளம் காவல்துறையினர் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி விசாரணை நடத்தியபோது, ஆட்டோவில் இருந்த மணிகண்டன் என்ற நபர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தால் காவல்துறை சார்பு ஆய்வாளரைத் தாக்கியுள்ளார். இதனையடுத்து ஆட்டோவில் இருந்த நபர்கள் தப்பியோடினர்.
மதுரையில் ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு: பீதியடைந்த மக்கள் - காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு
மதுரை: காவல்துறையினரை கத்தியால் தாக்கி ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோட முயன்ற மணிகண்டன், சிவபிரகாஷ், கார்த்திக், ரமேஷ், ராஜகணேஷ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரவுடிகள் சிலர் கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது