தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைரலாகும் பழைய நீராவி எஞ்சின் ரயிலின் புகைப்படம்.. இது நம்ம ஊரு தான்! - old steam engine train

புகையைக் கிளப்பியவாறு பழைய நீராவி எஞ்சினின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பழைய நீராவி எஞ்சின் ரயிலின் புகைப்படம்.. இது நம்ம ஊரு தான்!
வைரலாகும் பழைய நீராவி எஞ்சின் ரயிலின் புகைப்படம்.. இது நம்ம ஊரு தான்!

By

Published : May 14, 2022, 6:56 PM IST

மதுரை: இந்தியாவில் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட போது மீட்டர்கேஜ் ரயில் பாதையில் நீராவி எஞ்சின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்பு ரயில் போக்குவரத்து மற்றும் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக ரயில்கள் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டன.

இந்த இரண்டுமே சுற்றுச் சூழலுக்கு அதிக கேடு விளைவிக்கிறது என்பதால், தற்போது மின்சார எஞ்சின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, கடந்த 1982 ஆம் ஆண்டில் மதுரை ரயில் நிலையத்தில் மீட்டர்கேஜ் பாதை மட்டுமே இருந்தது.

ரயில்கள் நீராவி எஞ்சின் மூலம் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில், சமீபத்தில் ஏப்ரல் 18 அன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் பாரம்பரியத்தை நினைவுகூறும் வகையில், ஒரு அரிய புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்தப் படத்தில், நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயிலாக மதுரை - விருதுநகர் செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்திலிருந்து செல்லும் எழில் மிகுந்த காட்சி பதிவாகியுள்ளது. இளங்காற்று வீசும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:பைக்குகளின் ராஜா.. வெளிநாட்டவர்கள் வியக்கும் புதிய தொழில்நுட்பம்!

ABOUT THE AUTHOR

...view details