தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு உளவியல் சோதனை செய்ய வேண்டும்" - மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - Lokesh Kanagaraj case

lokesh kanagaraj: லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், லியோ படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜை உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்
இயக்குநர் லோகேஷ் கனகராஜை உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 2:18 PM IST

மதுரை: ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜா முருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.

மேலும் இந்த படத்தில் கலவரம், சட்ட விரோத செயல்கள், கார், இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் குற்றங்கள் செய்வது போன்ற காட்சிகள் மூலம் சமூகத்தை தவறாக வழிகாட்டுதல் வழங்கி ஊக்கப்படுத்துகிறார் இதுபோன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை திரைப்படமாக்கியதற்கு இந்திய தண்டனை சட்டங்களின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் லியோ படக்குழு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஏற்கனவே லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன் புகை பிடித்தல் காட்சி, பாடல் வரிகள் சர்ச்சை என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு..பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details