தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற முதியவர்.. சாதுரியமாக செயல்பட்ட பொதுமக்கள் - மதுரையில் பரபரப்பு! - news in tamil

Madurai news: மதுரையில் நடுரோட்டில் யாரும் எதிர்பாராத விதமாக தீக்குளிக்க முயன்ற முதியவரை, பொதுமக்கள் சாதுரியமாக செயல்பட்டு காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற முதியவர்.. சாதுரியமாக செயல்பட்ட பொதுமக்கள்
நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற முதியவர்.. சாதுரியமாக செயல்பட்ட பொதுமக்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:33 AM IST

நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற முதியவர்.. சாதுரியமாக செயல்பட்ட பொதுமக்கள்

மதுரை:காளவாசல் பகுதியில் வழக்கம்போல் போக்குவரத்து இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், நேற்று (அக்.26) திடீரென முதியவர் ஒருவர், ரோட்டின் நடுவே தன் உடலுக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்பாராத விதமாக முதியவர் ஒருவர் தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவ்வாறு எரிந்த நிலையில் சாலையில் ஓடியவரை, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் சாதுரியமாக செயல்பட்டு, அவர் மீது பற்றி இருந்த தீயை அணைத்து காப்பாற்றியுள்ளனர்.

பின் முதியவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, தீக்குளிக்க முயற்சி செய்த நபர் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த அழகப்பன் (65) எனவும், இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த பத்து நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று மாலை தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். நடுரோட்டில் முதியவர் ஒருவர் தன் உடலுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் மதுரை காளவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:கல்யாண வீட்டில் நடந்த கொலை..! அவிநாசியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details