தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - அஞ்சலி

மதுரை: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புதூரில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

By

Published : Apr 28, 2019, 8:04 AM IST

Updated : Apr 28, 2019, 9:30 AM IST

ஈஸ்டர் திருநாளான ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 253 பேர் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உலக மக்கள் தங்களது கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், மதுரை புதூர் பகுதியில் உள்ள தேவாலயத்தில், இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'சமய நல்லிணக்க கூடுகை' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மெழுகுவத்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தலைமை தாங்கி நடத்திய மக்கள் கண்காணிப்பகம் நிர்வாகி ஹென்றி டிஃபென் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மதுரை மாநகரத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வெவ்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினோம். இந்த நிகழ்வால் ஒரு அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. எந்தவிதமான வன்முறைகள் நடந்தாலும், எந்த நாட்டில் நடந்தாலும் மக்கள் அதை எதிர்ப்பவர்கள் என்பதை உணர்த்துவதற்காக இந்த நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புதூரில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்

இதன் மூலமாக உலகத்தில் எந்த நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் எந்த மதத்தினருக்கு நடந்தாலும் அவர்களுக்காக பிரார்த்திப்போம், பயங்கரவாதிகளை எதிர்ப்போம். இஸ்லாமியர்கள் நம்முடைய எதிரிகள் அல்ல, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மட்டுமே நமது எதிரிகள். அவர்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல என்பதை பகிரங்கமாக பரப்புவதற்கு இந்நிகழ்வை நடத்தினோம்" என்றார்.

Last Updated : Apr 28, 2019, 9:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details