தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில்நுட்ப கோளாறு: மதுரையில் 5 மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதம் - dubai madurai flight

மதுரையிலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 5 மணி நேரத்திற்கும் மேல் பயணிகள் காக்கவைக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப கோளாறால் 5 மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதம் அவதிக்குள்ளான பயணிகள்
தொழில்நுட்ப கோளாறால் 5 மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதம் அவதிக்குள்ளான பயணிகள்

By

Published : Jun 11, 2022, 7:53 PM IST

மதுரையிலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் நண்பகல் 12 மணியளவில் புறப்பட்டு செல்லும். அந்த வகையில் இன்று(ஜூன் 11) துபாய் செல்ல இருந்த விமானம் 161 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் காத்திருப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொழில்நுட்ப கோளாறால் 5 மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதம் அவதிக்குள்ளான பயணிகள்

இதையடுத்து விமானத்தின் கோளாறுகளை சரி செய் நீண்ட நேரமானது. இதானால் 5 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காக்க வைக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க:சிசிடிவி: நாமக்கல்லில் குழந்தை மீது ஏறிய கார்

ABOUT THE AUTHOR

...view details