தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு - ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து, மதுரை மத்திய சிறை நிர்வாகம் உத்தரவளித்துள்ளது.

ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு
ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு

By

Published : Jul 15, 2022, 6:15 PM IST

மதுரை:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார், ரவிச்சந்திரன். இந்நிலையில் உடல்நிலை குன்றியதை ஒட்டி, தன்னைக் கவனிக்க தனது மகன் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்கக்கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றம் அளித்த பரிசீலனையின் அடிப்படையில் தமிழ்நாடு உள்துறை அமைச்சகம், ரவிச்சந்திரனுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதனையடுத்து மதுரை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் தனது தாயார் வசிக்கக்கூடிய சூரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே ரவிச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவ ஓய்வில் உள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல் 8 முறை பரோல் நீட்டிப்பு செய்த நிலையில் மீண்டும் 9ஆவது முறையாக அவரை மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு அளித்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு !

ABOUT THE AUTHOR

...view details