மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சை பிரிவில் 1400 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அங்கு ஆக்ஸிஜனுடன் கூடிய 400 படுக்கைகளும் நிரம்பிய நிலையில், 120 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஆக்ஸிஜன் நிரப்பிகள் முழுவதுமாக தீர்ந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதனிடையே போதிய ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் சிலர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக தற்காலிகமாக சிறிய அளவிலான சிலிண்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டது.
நேற்றிரவே (மே16) ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவிய நிலையில் தொடர்ந்து முறையான கண்காணிப்பு இல்லாத நிலையில் இன்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவியது. தொடர்ந்து திருச்சியிலிருந்து ஆக்ஸிஜன் டேங்கர் மூலம் ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனையுடன் காணப்பட்டனர்.
உறவினர்களின் இந்த பரிதாப நிலையைக் கண்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மன தைரியத்துடன் இருக்கக் கோரி நோயாளிகளுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.
மதுரையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு - நோயாளிகள் கடும் அவதி - patients
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
oxygen deficit in madurai government hospital
இதையும் படிங்க: வசந்த் & கோ நிறுவனம் சார்பாக ரூ.25 லட்சம் நிதி