தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டெடுப்பு! - சமணர்களின் குகை

மதுரை: சமணர்களின் குகைகளில் மட்டுமே காணப்பட்ட தமிழி எழுத்துகள் தற்போது உசிலம்பட்டியில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் உள்ளது.

உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டெடுப்பு!
உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டெடுப்பு!

By

Published : Dec 26, 2020, 10:51 AM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிகப்படியான தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவரும் சூழலில் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி சீலக்காரியம்மன் கோயில் அருகே ஒரு கல்லில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துகள் கொண்ட கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கண்டறிந்துள்ளார்.

இந்தக் கல்வெட்டை மதுரை தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி, மதுரை அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன் தலைமையிலான குழுவினர் இன்று (டிச. 26) ஆய்வுசெய்து தமிழி எழுத்துகள் அடங்கிய கல்வெட்டு என்பதை உறுதிசெய்துள்ளனர். மேலும் மூன்று வரிகள் கொண்ட தமிழி எழுத்துகள் உள்ளதாகவும், சில இடங்களில் வரிகள் சிதைந்து இருப்பதால் இதை நகல் எடுத்து முழுமையாக ஆய்வுசெய்த பின்னரே கல்வெட்டில் என்ன பொறிக்கப்பட்டுள்ளது தெரியவரும் எனத் தெரிவித்தனர்.

உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டெடுப்பு!

மேலும், தமிழ்நாடு முழுவதுமாக 40 தமிழி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ள சூழலில், மதுரையில் மட்டும் 20 தமிழி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இந்தக் கல்வெட்டு தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட 41ஆவது தமிழி எழுத்து அடங்கிய கல்வெட்டு எனவும், பெரும்பாலும் சமணர்கள் குகைகளில் மட்டுமே காணப்பட்ட தமிழி எழுத்துகள் சமீபகாலமாக பிற இடங்களிலும் காணப்படுகின்றன, குறிப்பாக புள்ளிமான்கோம்பை, தாதம்பட்டி, கின்னிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து இந்த கொங்கபட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் எழுத்துகளை முதலில் எழுதியவன் தமிழன் என்பதை நிரூபிக்கும் சூழலில் நாம் இருந்தாலும் இது போன்ற பிற இடங்களிலும் தமிழி எழுத்துகள் காணப்படுவதால், பரவலாக தமிழன் தமிழி எழுத்துகள் மூலம் எழுத்துகளை உருவாக்கி வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. ஆதலால் தமிழி எழுத்துகளின் தோற்றம் வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கால கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறினர்.

இதையும் படிங்க...2020 சினிமா செய்திகள்: டாப் 50!

ABOUT THE AUTHOR

...view details