மதுரை:திருச்சி லால்குடியை சேர்ந்த அசோக் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள எல்.அபிசேகபுரத்தில் துணை மின்நிலையம் அமைக்க குக்கூர் சாலையில் பனை மரங்களை வெட்டி மின் கம்பங்களை நட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
50 ஆண்டுகள் பலன் தரும் பனை மரங்களை வெட்டாமல், மாற்று பாதையில் மின் கம்பங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், மின்கம்பங்களை அமைப்பதற்கு 13 பனை மரங்களை வெட்ட வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.