தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரிய மனுவை நிராகரித்த ஆர்.டி.ஓ.வின் உத்தரவு ரத்து- உயர் நீதிமன்றக்கிளை - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

காட்டுநாயக்கர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரிய மனுவை நிராகரித்த வருவாய் கோட்டாட்சியர் (RDO) அலுவலரின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.

Order of RTO rejecting petition for grant of caste certificate quashed- High Court Madurai Bench Order
ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரிய மனுவை நிராகரித்த ஆர்.டி.ஓ.வின் உத்தரவு ரத்து- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

By

Published : Jul 1, 2023, 4:46 PM IST

மதுரை:கரூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தான் கரூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். கரூர் மாவட்டத்திலேயே பள்ளி படிப்பைப் பயின்றுள்ளேன். தான் காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே தனக்கு காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி எனது பள்ளி ஆவணங்கள் மற்றும் எனது தந்தையின் பள்ளி ஆவணங்கள் மற்றும் எனது தந்தை வழி உறவினருக்கு காட்டுநாயகர் சமூகத்தைச் சேர்ந்தவர் என வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைகள் ஆகியவற்றை இணைத்து எனக்கு காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன்.

எனது மனுவை,வருவாய் கோட்டாட்சியர் (RDO) நிராகரித்துவிட்டார். எனவே, வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எனக்கு காட்டுநாயக்க பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்' என முடிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது‌. அப்போது நீதிபதிகள், 1977ஆம் ஆண்டு அரசு அறிவிப்பின்படி ஒருவர் நிரந்தர வசிப்பிடத்தில் இருந்து சான்றிதழ்களை விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. இதில் நிரந்தர வசிப்பிடம் என்பது அவர்கள் நிரந்தரமாக தங்கி இருக்கும் இடத்தைக் குறிக்கிறது.

இதையும் படிங்க: மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும் - ருசியாகப் பேசிய தமிழிசை

மாறாக, அவர்களின் சொந்த இடத்தினை குறிக்கவில்லை. எனவே இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரரின் பெற்றோர் மற்றும் தாத்தா நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். எனினும், பல ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வசித்து வருவது தெரிய வருகிறது. எனவே, சாதிச் சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை ரத்து செய்த வருவாய்த்துறை அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக, நீதிபதிகள் அமர்வு தெரிவித்து உள்ளது.

மனுதாரருக்கு காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மனுதாரரின் விண்ணப்பத்தை மனுதாரர் பதிவு செய்த ஆவணங்களின் அடிப்படையில் வருவாய்த்துறை அலுவலர் பரிசீலனை செய்து நான்கு வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும்; மேலும் வருவாய் கோட்டாட்சியர் உரிய புரிதல் இல்லாமல், மனுதாரரை தேவையில்லாமல் இந்த நீதிமன்றத்தில் அலையவிட்டு உள்ளனர். எனவே, மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும்; இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்து வழக்கினை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: Government Jobs: அரசுப் பணியிடங்களில் இனி முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details