தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் எண்ணம் உறுதியாக நிறைவேறும்' - ஓபிஎஸ் - ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய அதிமுக என்ற இயக்கத்தின் எண்ணம் உறுதியாக நிறைவேறும் என்று எதிர்க்கட்சி முன்னாள் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

’ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் எண்ணம் உறுதியாக நிறைவேறும்’ - ஓபிஎஸ்
’ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் எண்ணம் உறுதியாக நிறைவேறும்’ - ஓபிஎஸ்

By

Published : Aug 8, 2022, 8:16 PM IST

மதுரை:சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, நீதிபதி மாற்றப்பட்டது வெற்றியின் முதல் படி எனக் கருதலாமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ”பேசுவதற்கு நிறைய இருக்கிறது பேசுகிறேன்... அஇஅதிமுக மாபெரும் தொண்டர்களின் இயக்கம்.

’ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் எண்ணம் உறுதியாக நிறைவேறும்’ - ஓ.பன்னீர்செல்வம்

தொண்டர்கள் எங்கள் பக்கம். எந்த நோக்கத்துடன் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அதிமுகவை உருவாக்கினார்களோ அந்த எண்ணம் உறுதியாக நிறைவேறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து அடுத்து செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் விமான நிலைய வளாகத்திற்குள்ளே சென்றார்.

இதையும் படிங்க: தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற மதுரை இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details