மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால் இதனை எப்படியேனும் தடுத்து நிறுத்துவதற்கு முகஸ்டாலின் தொடர்ந்து முயன்று வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் திமுகவின் சாயம் வெளுத்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.