தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் நினைவுச் சின்னம்' - தேனி எம்.பி. உறுதி! - memorial

மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிகட்டை போற்றும் வகையில் காளையுடன் கூடிய நினைவுச் சின்னம் உடனடியாக அமைக்கப்படும் என்று தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உறுதியளித்துள்ளார்.

ஓ.பி.ஆர் உறுதி

By

Published : Jun 9, 2019, 10:16 AM IST

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரவீந்திரநாத் குமார், மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள குமாரம், மணியஞ்சி, தண்டலை, கோட்டைமேடு, கல்லணை ஆகியப் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

ஓ.பி.ஆர். உறுதி

அப்போது பேசிய அவர், "இப்பகுதி மக்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை தெரிவிக்க, சோழவந்தான் பகுதியில் தேனி மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும். தேர்தலின்போது, அறிவித்த வாக்குறுதியின்படி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பெருமையை போற்றும் வகையில் காளைகளுடன் கூடிய நினைவுச் சின்னம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கப் பாடுபடுவேன்" என உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details