மதுரை மாநகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சமத்துவத்தை நிலைநாட்டுவதே எங்கள் நோக்கம். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக கூட்டணி தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளது.
காரணம் தேர்தலுக்கு முந்தைய கணிப்பு, புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையின்படி திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்குப் பின் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். எங்களுக்கு மோடி உறுதுணையாக உள்ளார் எனக் கூறுகின்றனர். இது எங்களுக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது.