மதுரையில் நேற்று பல்வேறு இடங்களில் திடீரென பலத்த இடியுடன் பெய்த கோடை மழையால் கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர், திருப்பரங்குன்றம், திருநகர், பெருங்குடி, அவனியாபுரம் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாநகர் முக்கிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மேலும் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பழமையான மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இந்நிலையில் மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புது கார் மீது மரம் விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.