மதுரை:உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்றை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே உள்ள இணையதளம் மூடப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் துணை ஆணையர் அருணாசலம் இன்று (நவ-4)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கென முன்னர் தனியார் நிறுவனம் மூலம் ஏற்படுத்தப்பட்ட இணையதளமான www.maduraimeenakshi.org மூடப்பட்டு, அதற்குப் பதிலாக தமிழ்நாடு அரசு இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.inஎன்ற அலுவல்சார் இணையதளம் (Official Website) உருவாக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இணையத்தேடு பொறிகளில், Hit அடிப்படையில் அணுகக்கிடைக்கும் முந்தைய இணையதளமான www.maduraimeenakshi.org-யை அணுகும் பயனர் புதிய அலுவல்சார் இணைய தளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in-க்கு தானாகவே திசைமாற்றப்பட்டு, அதன்மூலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.