தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குழந்தை தொழிலாளர்களுக்கு நீதி மறுப்பு'- வழக்குரைஞர் ஆதங்கம்! - கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்கள்

மதுரை: மதுரையில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளரும் வழக்குரைஞருமான ஃபிலோமின் ராஜ் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

child labour
child labour

By

Published : Jun 5, 2020, 3:22 AM IST

மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே, கடந்த மே 28ஆம் தேதி கொத்தடிமையாக வேலை பார்த்த இரண்டு குழந்தை தொழிலாளர்கள் உள்பட ஐந்து வடமாநில தொழிலாளர்கள் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் ஐடியாஸ் தொண்டு நிறுவனம் வழக்குறைஞர் ஃபிலோமின் ராஜ் ஆகியோரின் உதவியுடன் வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் உள்ளிட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்தி மீட்டனர்.

ஆனாலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நீதி இன்னும் கிடைக்கவில்லை என்று வழக்குரைஞர் ஃபிலோமின் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "மதுரை அருகே ஆழ்குழாய் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி தொழிலாளர்கள் ஐந்து பேரை மீட்டதில், இருவர் குழந்தை தொழிலாளர்களாக இருந்தனர்.

அதேபோன்று வேலூரில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும், திண்டுக்கல், கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதை தொடர்ந்து கண்காணித்து அவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

அச்சம்பத்து அருகே மீட்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் தற்போது, அழகர் கோயில் அருகிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மீட்கப்பட்ட அச்சம்பத்து கிராமத்தின் அருகிலேயே மதுரை காமராசர் பல்கலைக்கழகம், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, அருள் ஆனந்தர் கல்லூரி போன்ற மையங்கள் இருக்கையில் 35 கிலோ மீட்டருக்கு அப்பால் அந்த தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

அனைத்து வருவாய் கோட்டாட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் இந்த விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தொழிலாளர்கள் நல வாரியம் மூலமாக நிவாரணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்தத் தொழிலாளர்களை மீட்பதற்காக கடும் போராட்டம் நடத்திய எங்கள் குழுவினர் குறிப்பாக தன்னை தங்க வைக்கப்பட்ட இடத்தில் தொழிலாளர்களை சந்திக்க அனுமதிக்கவில்லை.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழங்குடி வன்கொடுமைச் சட்டத்தின் படி இந்த விதிமுறைகள் அனைத்தும் மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.

'குழந்தை தொழிலாளர்களுக்கு நீதி மறுப்பு'- வழக்குரைஞர் ஆதங்கம்!

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முழுமையான நீதி கிடைப்பதற்கான எந்த வழிமுறைகளையும் கோட்டாட்சியர்கள் பின்பற்றவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் தலையிடவேண்டும்.

மேலும் மதுரை மாவட்ட நீதிபதியையும் அணுகியுள்ளோம். எங்களுக்கு இதில் நீதி கிடைக்காத பட்சத்தில் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகுவோம்" என்றார்.

இதையும் படிங்க:ஊரடங்கால் நஷ்டத்தை சந்தித்த ரயில்வே

ABOUT THE AUTHOR

...view details