தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் புதிதாக கரோனா தொற்றால் யாரும் அனுமதிக்கப்படவில்லை - கரோனா தொற்று காரணமாக யாரும் அனுமதிக்கப்படவில்லை

மதுரை: மாவட்டத்தில் நேற்று (மே 19) புதிதாக வைரஸ் தொற்று காரணமாக யாரும் அனுமதிக்கப்படவில்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

corona
corona

By

Published : May 20, 2020, 5:32 PM IST

மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை மாநகர், மாவட்டம், அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், முன்கள சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தானியங்கி ரோபோ அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலமாக நோயாளிகளுக்கு தேவையான மருந்து, உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனையில் தற்போது வரை 163 பேர் சிகிச்சைப் பெற்று வந்துள்ள நிலையில், நேற்று (மே 19) புதிதாக வைரஸ் தொற்று காரணமாக யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதுவரை 108 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி இதுவரை இருவர் உயிரிழந்தனர். தற்போது 53 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details