தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலம் கட்டுமான விபத்துக்கு காரணம் என்ன? - என்.ஐ.டி. பேராசிரியர் குழு ஆய்வு - madurai news

நத்தம் சாலையில் கட்டப்பட்டுவரும் பாலம் கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்து குறித்து என்.ஐ.டி. பேராசிரியர் குழு நேரில் ஆய்வுமேற்கொண்டது.

nit
மதுரை

By

Published : Aug 31, 2021, 9:46 AM IST

Updated : Aug 31, 2021, 10:56 AM IST

மதுரை: உமச்சிகுளம் அருகேயுள்ள செட்டிக்குளம் வரையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் 7.5 கிலோ மீட்டர் நீளத்தில் 544 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் ஆகஸ்ட் 28 அன்று மதியம் நாராயணபுரம் பேங்க் காலனி பகுதியில் மேம்பாலத்தை இணைக்கும்போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக இணைப்புக் கட்டுமானம் பாலத்தின் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் உத்தரப் பிரதேச தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் காயமடைந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமான பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலம் கட்டுமான விபத்து

என்.ஐ.டி. பேராசிரியர் குழு ஆய்வு

இவ்விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும் எனப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 30) பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்தனர். விபத்திற்கு காரணமாகக் கூறப்படும் ஹைட்ராலிக் ஜாக்கியின் தன்மை குறித்து, ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:காவலருக்குப் 'பளார்' - கத்தியைக் காட்டி மிரட்டிய லாரி ஓட்டுநர் கைது

Last Updated : Aug 31, 2021, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details